தைரியம்ங்கிறது என்னனா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. நான் எனக்கு சொல்லிகிட்டேன் நீங்க தைரியமா படிங்க.
பயத்ததை தூக்கிப்போட்டு பதிவை துவங்குறேன்.. முதலில் எனக்கு என்ன தெரியும்ன்றதை சொல்லிடறேன். எனக்கு தமிழ் இலக்கணம்,எழுத்துப்பிழை இல்லாமல் எழுதறது,வரலாறு,புவியியல்,சமூக அறிவியல்,கணிதம் வரை எதுவும் சரியா தெரியாதுன்றது தெரியும் ஹிஹி.
அச்சச்சோ உங்களை எல்லாம் வரவேற்க மறந்துட்டேன்,மன்னிச்சூ... என் இனிய தமிழ் மக்களே
டிவிட்டரில் கீச்சராய் 140 எழுத்துகளில் மொக்கை போட்டு பறந்து கொண்டிருந்த நான்,நீங்கள் தந்த ஆதரவிலும் உற்சாகத்திலும் (அங்க கழுவி கழுவி ஊத்தினது யாருக்கு தெரிய போகுது)வலைதளத்தில் கால் பதிக்க வந்திருக்கிறேன்.
140 எழுதுக்களுக்கே நொண்டி அடித்துக்கொண்டிருந்த நான் இந்த பரந்து விரிந்த வானில் என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியலை.. இதுக்கு மேல இதே ஃப்ளோவில் எழுதவும் முடியலை.
இருந்தாலும் எப்படியோ முதல் பதிவிற்கு இத்தனை வரிகள் தேத்திட்டேன்..அதே போல் அப்பப்போ எதாவது பதிவையும் தேத்திடுவேன்.
நீங்களும் உங்க இஷ்ட தெய்வத்தை நாத்திகவாதிகள் இஷ்டமில்லா தெய்வத்தை வேண்டிகிட்டு அப்பப்போ வந்து பதிவை படித்து உங்க திட்டு குட்டு பாராட்டு சீராட்டு எல்லாம் சொல்லிட்டு போனீங்கனா வேறென்ன நான் மகிழ்ச்சி அடைவேன்.
நிற்க.. "ஆமாம் நான் இப்போ எங்கே இருக்கேன்னு " யாருக்காவது சந்தேகம் வருதா -வெரி குட் கையை குடுங்க நீங்க என் முதல் ரசிகர் ஆகிட்டீங்க.வாழ்த்துகள்..
நின்றவர்கள் உட்காருங்க.. இத்துடன் எனது உரையை முடிச்சிக்கிறேன்.அடுத்த பதிவு ஒரு சிறுகதை.. தலைப்பு "முதல் சிறுகதை" எப்புடி !! பின்குறிப்பு :நான் அதிகம் சினிமா பார்க்க மாட்டேன் அதனால் அதிகம் விமர்சனம் எழுத மாட்டேன் அப்படி எழுதும் போதும் படத்தோட கதையை எழுத மாட்டேன்..
எனது இந்த முதல் பதிவிற்கு முதல் இரண்டு கமென்ட் போடறவங்களுக்கு சிறப்பு பரிசு கொடுப்பதை அறிந்து கமென்ட் செய்த "மீ த ஃபர்ஸ்ட் முத்து"விற்கும் ""மீ த செகன்ட் கிருஷ்ணன்"ற்கும் பரிசு அனுப்பப்படும் !!!
மூன்றாவது கமென்ட் போட்ட "நல்ல மனசுக்காரன்"ற்கு உண்மையிலேயே நல்ல மனசு..
என்னை பேட் வோர்ட்ஸில் திட்டிய நாலாவது கமென்ட் நீக்கப்பட்டது.. ஐந்தாவது கமென்ட் "என் மனசாட்சி" சொல்வதை நீங்களே படிச்சிக்குங்க....
-அவ்வ்வ்வ்வ் சும்மா டமாசு கோவிச்சிக்காதீங்க..போகும் போது முன்னூறு ரூபாய்க்கு மறக்காம மொய் செஞ்சிடுங்க.. அதான் கமென்ட் மறக்காம எழுதுங்க.
நன்றி.
மீ த ஃபர்ஸ்ட் முத்து :
ReplyDeleteநான் தான் முதல் பரிசு..
மீ த செகன்ட் கிருஷ்ணன்:
ReplyDeleteநான் இரண்டாவது..
நல்ல மனசுக்காரன்:
ReplyDeleteநீ ஷேக்ஸ்பியர் மாதிரி பெரிய ரைட்டரா வருவை தம்பி... (ஏன்னா அவரை தான் நான் படிப்பதே இல்லை)
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன் மனசாட்சி:
ReplyDeleteஉன் பதிவுக்கு நீயே கமென்ட் போட்டுக்கிறியே நீ எல்லாம்... உன்னை திட்டுனா எனக்கு அசிங்கம்.சே.. பொழைச்சுபோ.
ஹா.. ஹா.. முதல் பதிவு தொடங்கியமைக்கு வாழ்த்துகள் நண்பரே.. தொடர்ந்து எண்ணங்களை பகிருங்கள்.. :-))))
ReplyDeleteநல்லாருக்கு! நல்லாத்தான் இருக்கும் :-)
ReplyDeleteamas32
ஜூனியர் கலக்கல் பதிவு ...சில வரிகளில் கீட்ஸ் நினைவுக்கு வருகிறார் ,,,கடைசி பத்தியில் நகுலனும் அசோகமித்திரனும் புகுந்து திரும்புகின்றனர் ....இதே போல் எழுதினால் அடுத்த சாரு நிவேதிதா நீங்கள் தான் ......கொடுத்த காசுக்கு இவ்ளோ தான் கூவ முடியும் ....
ReplyDeleteநாங்களும் படிச்சிட்டோம்.. அட்டன்டன்ஸ் போட்டுக்கோங்க
ReplyDeleteசெல்வு எபெக்ட் தெரியுது முயற்சிக்கு வாழ்த்துகள் உங்க சொந்த நடையிலேயே முயற்சி செய்யுங்க
ReplyDeleteBY
உமாக்ரிஷ்
நல்லாதாங்க இருக்கு ! வாழ்த்துகள்!
ReplyDeleteபடிச்சாச்சு! கமெண்டும் போட்டாச்சு!
ReplyDeletevaazthukkal
ReplyDelete//அடுத்த சாரு நிவேதிதா நீங்கள் தான்//
ReplyDeleteவாழ்த்துகள்.
ஐயா வளருங்கள்.... வாழ்த்துக்கள்.... நல்லாருக்கு உங்க முதல பதிவு ....
ReplyDeleteரணகளம் ...
ReplyDeleteThambi ...ithu ratha puumi.....
ReplyDeleteJakkirathai......
Nan ennaiya sonnen ...!!!!
இந்த டேக்டிக்ஸ் தெரிஞ்சுருந்தா நானும் முதல் போஸ்ட்டுக்கு ஒரு 5 கமெண்ட் தேத்திருப்பேன்..
ReplyDeleteவாழ்த்துகள் சூனிய்ர்மான்க்...
கலக்குங்க ..உங்கள ப்ளாக் எழுத தூண்டின அந்த அக்கா நல்லாஇருக்கட்டும் ...## பத்த வச்சிட்யே பரட்டை
ReplyDeleteமுதல் பதிவு...வாழ்த்துக்கள் !
ReplyDeleteமுதல் கோணல் முற்றிலும் கோணல் போல் அல்ல...எழுத்து என்பது !
ஜூனியர் ஓல்டு மோன்க் பெயர் காரணம்'ன்னு விளக்கம் போட்டு மூணாவது bloga போஸ்ட் பண்ணுங்க...
முதல் ட்வீட் எப்படி போட்டிருப்போம்ன்னு நமக்குத் தெரியாது.
ஆனா...முதல் பதிவு எப்பவும் படிக்கலாம்...
வாழ்த்துங்கள் பதிவர்களை... வளருங்கள் வலைப்பதிவை
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்! ....தொடர்ந்து எழுதுங்க:)) - @shanthhi
ReplyDeleteஷேக்பரீத்,amas,இளையசிங்கம் நவீன்,selva ganapathy,உமாக்ரிஷ்,DKCBE,கண்ணீரின் காதலன்,வேதாளம்,pushparaj,Santhosh Neelamegam,NAAI-NAKKS ,பிசாசு,kakakapo,ஆகாயமனிதன்..,@shanthhi,pradeep_kumar73
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்னி நன்னி நன்னி...
தலீவா,உனக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிச்சயம்.(பி.கு-20ரூ டாப் அப் பண்ணா தேவலாம்)
ReplyDeleteஆஹா...நீயுமா?!..சரி...`விதி` யாரை விட்டது? ஹே..ஹே...நான் என்னைச் சொன்னேன்!# வாழ்த்துகள்...வாழ்க...வளர்க!
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteசன் பிக்சர்ஸ் அடுத்த சி.இ.ஓ நீதான்யா.. # விளம்பரப்படுத்தியே கொல்றான்யா. பதிவு கூட மன்னிச்சு விட்றலாம்
ReplyDeleteபை த பை.. வாழ்த்துக்கள் நண்பா முயற்சிக்கு.. தொடர்ந்து எழுது நல்லா எழுது..
iGhilli
முன்னுரை #ரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
இந்தா பிடி 300! கூடுவாஞ்சேரி கோயிந்த்சாமி பேர்ல எழுதிக்கங்க! கதை நல்லால்லேல்னா, கதை கந்தலாயிடும்! ஞாபகம் இருக்கட்டும்! ஏன்னா எனக்கு படிக்க மட்டும்தான் தெரியும்! ;-)
ReplyDeleteவாழ்த்துகள். நல்லாத்தான் இருக்கு!! :)))
ReplyDeleteநண்பா, நாலு லைன்க்கு மேல எந்த விமர்சனமும், செய்தியும் எழுதிடாத. 25வரிக்கு மேல எந்த கதையும் எழுதிடாத. இல்ல ஆள்வச்சு வெட்டுவேன் ஆமா! :)
ReplyDeleteவாழ்த்துகள் ... ஸ்டார்ட் மீயுசிக் ... சேட்டை...
ReplyDeleteதங்களின் எழுத்துநடையை பார்த்ததும், சுஜாதாவை இழந்த சோகம் போய்விட்டது... (சுஜாதான்றது எங்க பக்கத்துவீட்டு பொண்ணு!) வாழ்த்துக்கள்! அடுத்தப்பதிவை பகிருங்கள்! :-)
ReplyDeleteஅட அனானிமஸ் பதருகளா!!!(not all)..விலை நெல்லுக்குத் தானய்யா விளம்பரம் தேவை.விதை நெல்லுக்கு எதுக்கு? இது விதை நெல்லு..வளரும் போது களை எடுக்களாம்..கலை கெடுக்காலாமா? எனக்கு தமிழே வராது..ஆனாலும்..Where there is a will there is a way! heart full congratulations to you..Good Start ( the music..music ) :)
ReplyDeleteClaps..!!
ReplyDelete>>எப்படியோ முதல் பதிவிற்கு இத்தனை வரிகள் தேத்திட்டேன்..அதே போல் அப்பப்போ எதாவது பதிவையும் தேத்திடுவேன்.
ReplyDeleteநீங்க தேத்துறதுல மன்னன்னு தெரியுமே? ஹே ஹே ஹேய்
அட ஆரம்பமே அள்ளுதே..
ReplyDelete//நீங்களும் உங்க இஷ்ட தெய்வத்தை நாத்திகவாதிகள் இஷ்டமில்லா தெய்வத்தை வேண்டிகிட்டு//
ReplyDeleteஇது ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க :)) பயப்படாம எழுதுங்க :))முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்துகள் நண்பரே! எழுத்தோட மட்டும் நிறுத்திக்காதீங்க இடை இடையே படங்கள்......என்ன நான் சொல்றது..!!! :-)
ReplyDeleteவாழ்த்துககுள் வலையுலகிலும் கலக்க.
ReplyDeleteமுதல் பதிவுக்கு வாழ்த்துகள்! அடிக்கடி பதிவு எழுதி படிக்க சொல்லி கொடுமை பண்ணக் கூடாது
ReplyDelete@Anonymous நன்றி
ReplyDelete@iyyanars ஹா ஹா நன்றி
@udanpirappe நன்றி
@iGhilli உன்னை அப்புறம் கவனிக்கிறேன் கில்லி
@சோனியா நன்றி அக்கா :-)
@Vadivel நன்றி நண்பா
@பரிசல்காரன் தேங்க்ஸ் பாஸ்..
@manosenthilkumar !!!
சேட்டை நன்றி சகா
@Balu Sv ஹா ஹா நன்றி
@asksukumar நன்றி நண்பா
Anonymous நன்றி
@சி.பி.செந்தில்குமார் எஇகொவெ :-))
@Vijay நன்றி
@கோமாளி செல்வா நன்றி
@K.Arivukkarasu என்ன சொல்றீங்க ?!! நன்றி
@Prabu Krishna நன்றி பாஸ்
@Renu :-)) நன்றி
நல்லாத்தான் எழுதிரீங்க வாழ்த்துகள்
ReplyDeletewishes !!!
ReplyDeleteNandru Nanba!!!!
ReplyDelete