Saturday, December 17, 2011

ரயிலுக்கு நேரமாச்சு...






ரயில் தண்டவாளம் 
கைதொடும் தூரத்தில் 
ஒண்டிக் குடித்தனம் 
ஏராளம்..

விரைந்து ஓடும்
ரயிலின் தாளத்தில் 
அதிர்ந்து ஆடும் 
வீடுகள்..

வாசல் வெளியே 
காலடி வைக்கையில்-சிதறி
தலையில் வந்துவிழும் 
குப்பைகள்..

யாரோ வீசும் 
எச்சில் இலை
வாசல் கோலத்தில்
வந்து விழும்..

மின்சாரம் இல்லா 
இருள் இரவில்
வேக நிலவாய்
கடந்து செல்லும்
ரயிலின் வெளிச்சம்..

ஆசை பிள்ளையோ
செல்ல நாய்க்குட்டியோ
இயந்திர ரயிலுக்கு
எல்லாம் ஒன்று தான்..

தலை கொடுப்பதும்
தவறி விழுவதும்
பத்தோடு ஒன்றாய்
சாதாரண விசயம்..

எனினும்
ரயிலின் கூவலே 
தாலாட்டாய்..
ரயிலின் அதிர்வில் 
குலுங்கும் தொட்டிலில்
நிம்மதியாய் தூங்குகிறது
என் பிஞ்சுக் குழந்தை.


6 comments:

  1. ரயில் என்றாலே எனக்கு ஒரு காதல் உண்டு....நான் பார்க்காத வேறு ஒரு கோணத்தையும் காட்டி இருக்கிறாய்...;))

    ReplyDelete
  2. //தலை கொடுப்பதும்
    தவறி விழுவதும்
    பத்தோடு ஒன்றாய்
    சாதாரண விசயம்..//
    mm..

    ReplyDelete
  3. இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_13.html

    ReplyDelete