Monday, January 9, 2012

காலக் கிறுக்கல்




இந்த நொடி
உடைந்து கொண்டே
போகிறது
கடந்த நொடியை போல

எதிர் வரும்
நொடியும்
கூட
உடைந்தே போகும்

இல்லாத காலம்
இருந்து கொண்டே
இருக்கிறது
எப்போதும்...

-புதிய பேனா
 வாங்கியதற்காக
 கிறுக்கிப் பார்த்ததில்
 எங்கிருந்து
 எப்படி வந்தன
 இந்த வரிகள் எல்லாம்

இந்த நொடியும்
உடைந்து கொண்டே போகிறது
வேறோர் கேள்வியுடன்..

இத்தனை நாள்
இவ்வரிகள் எல்லாம்
இப்பேனா மையில்
மறைந்து இருந்தனவா ?