Wednesday, November 23, 2011

'முதல் சிறுகதை'

ஒரு எழுத்தாளன் உருவாகுறது எவ்வளவு கடினம்னு அவன் உபயோகிக்கும் பேனாவுக்கும் காகிதத்திற்கும் தான் தெரியும்.

இங்க கூட ஒருத்தர் சிறுகதை எழுத்தாளராக மன்னிக்க ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராக தலைகீழாய் நின்னு தண்ணி குடிச்சிட்டு இருக்கார்..

றை முழுக்க கசக்கி எறியப்பட்ட காகிதத்துக்கு இடையில் ஒரு மூலையில் அமர்ந்து காகிதத்தை கசக்கி தூக்கி போட்டுட்டு இருக்கார்..ச்சே சிறுகதை எழுதிட்டு இருக்கார்.

சில வரிகள் எழுதிப்பார்த்து பிடிக்காட்டி கசக்கி தூக்கி போட்டுடுவார்.சில சமயம் எதுவுமே தோணாமல் வெற்று காகிதத்தை கசக்கி தூக்கி போடுவார் இன்னும் சில முறை நல்லா எழுதியிருந்தும் பிடிச்சிருந்தும் பழக்க தோஷத்துல கசக்கி வீசிடுவார்.அப்புறம் சுதாரித்து காகித குப்பையிடையில் ஒவ்வொண்ணா எடுத்து பார்த்து அதை தேடி எடுப்பார்.அப்புறம் இது தானா நமக்கு பிடிச்சதுன்னு குழப்பம் வந்து அதையும் கசக்கி தூக்கி போட்டுடுவார்..

ப்படி இவர் காகிதத்தை கசக்கி மூளையை கசக்கி யோசிக்கிறதுக்கு பின்னாடி பெரிய லட்சியமே இருக்கு..

எப்படியாவது தன்னோட சிறுகதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பி அது முத்திரை கதையாக நட்சத்திர எழுத்தாளர் கதையாக இன்ன பிற அங்கீகாரம் எல்லாம் முதல் கதையிலேயே அடையணும் எப்படியாவது சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான ஆஸ்கர் விருதை வாங்கி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்..என்னது சிறுகதை எழுத்தாளருக்கெல்லாம் ஆஸ்கர் கிடையாதா ?! இதையெல்லாம் சொல்லி அவர் ஆஸ்கார் ஆசையில் லாரி ஏத்திடாதீங்க.

ஏன்னா இதுக்காக அவர் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு எண்பத்தி ஐந்து வயசு கிழவி பின்னாடி சுத்தியிருக்கார்.ச்சீ ச்சீ தப்பா நினைக்காதீங்க,அது ஒரு வாழைப்பழம் விற்கிற கிழவி.அதை பாலோ பண்ணி வாட்ச் பண்ணி அப்சர்வ் பண்ணி ஒரு எதார்த்தமான சோகமான 'பழ'ங்கதை எழுதலாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான்.

ப்படி இப்படின்னு ஒரு பழக்காரியின் கதைன்னு தலைப்பிட்டு ஒரு கதை எழுதியும் முடிச்சார்.அந்த கதை அழுகிடாம இருக்க ப்ரிட்ஜில் வச்சு பாதுகாத்தார்.திரும்ப திரும்ப படிச்சு பார்த்து இதை அனுப்பிடலாம்னு முடிவெடுத்திருந்த வேளையில் அந்த கிழவிக்கிட்ட போய் பத்து ரூபாய்க்கு அஞ்சு பழம் கேட்டார்,அந்த கிழவியோ நாலு பழம் தான் தரமுடியும்னு சொல்லிடுச்சு..

இதை கேட்டு கடுப்பாகி ஒரு எழுத்தாளனுக்கே உரிய கோபத்தில் ரெண்டு வார்த்தை காட்டமா பேசிட்டார்.அதைக்கேட்டு அந்த வாயில் பல் இல்லாத கிழவி நாக்கு மேல பல்லை போட்டு அசிங்க அசிங்கமா திட்டிடுச்சு.பதிலுக்கு இவரு கிழிகிழின்னு கிழிச்சிட்டார் வேறெதை சிறுகதை எழுதின பேப்பரை தான்.அந்த கிழவிய ஒண்ணும் பண்ண முடியலை.

கேவலம் ஒரு பழத்துக்காக வரலாற்றில் இடம் பெரும் வாய்பை அந்த பாட்டி இழந்திடுச்சேன்னு இவருக்கும் ஏகப்பட்ட வருத்தம்.

ந்த வாழைப்பழத்துல வழுக்கி விழுந்தது மட்டுமில்லை சிறுகதைக்கான சிந்தனையில் அடுத்தடுத்து அவருக்கு தான் எத்தனை போராட்டம் பிரச்சனை..

வானத்தை பார்த்தபடி கதை யோசிச்சுகிட்டே போய் தெருவில் படுத்திருந்த நாயை மிதிச்சு அது அவரை ஓட ஓட துரத்தினது..எதையோ யோசிச்சபடி போய் குழிக்குள்ள குப்புற விழுந்தது,தந்தி கம்பத்துல மோதினது,கண்தெரியாத பெருசுகளை இடிச்சு தள்ளினது,புதுசா சைக்கிள் ஓட்ட கத்துக்கும் சிறுசுகளை சைக்கிளோட கவுத்தது,நடந்தபடியே போய் குளத்துல விழுந்தது இதுக்கெல்லாம் மேல தன் வீட்டுக்கு பதிலா அடுத்த வீட்டுக்குள்ள புகுந்து கலவரத்தை உண்டாக்கினது.. எத்தனை எத்தனை..

ல்லா தடைகளும் தாண்டி லட்சிய வெறி குறையாம ஒரு சிறுகதையும் யோசிச்சுட்டார்.அந்த நொடியில் அவருக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை,பறவை பறக்கலை,மரம் அசையலை,கடிகாரம் நகரலை,பூமி சுத்தலை,தலையும் புரியலை காலும் புரியலை.கலர் கலரா ஸ்கெட்ச்பென் வாங்கி பார்டர் எல்லாம் போட்டு கதையை அப்படியே பேப்பரில் எழுதினார் இல்லையில்லை வரைஞ்சார்.

புதுசட்டை போட்டுக்கிட்டு குலசாமியை வேண்டிக்கிட்டு போஸ்ட் ஆபிஸ் புறப்பட்டார்.ஒரு எழுத்தாளனாவே நடந்தார்,கவர் வாங்கினார்,ஸ்டாம்ப் வாங்கினார்.திரும்ப ஒருமுறை உலகத்தில் உள்ள எல்லா சாமியையும் மதவேறுபாடு இல்லாமல் வேண்டிக்கிட்டு பதட்டத்தை காட்டிக்காம,கதையை கவரில் போட்டு விலாசம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டார்.நல்லவேளை அவர் முழுக்கையையும் சிரமப்பட்டு பெட்டி உள்ள விட்டு கவரை பத்திரமா பெட்டியின் அடியில் சேர்த்ததை யாரும் பார்க்கலை இல்லேன்னா சந்தேக கேஸில் பிடிச்சிட்டு போயிருப்பாங்க.

அப்புறம் எழுத்தாளன்ற தோரனையிலேயே நடந்து வந்தார்.அதை யாரும் கவனிக்கலைன்றதை அவரும் கவனிக்கலை.ராத்திரி முழுக்க தூக்கம் வரலை கட்டிலில் புரண்டார்,கனவுல மிதந்தார் எப்ப தூங்கினோம்ன்னு தெரியாமலேயே தூங்கிப் போனார்.

பொழுதுவிடிஞ்சு வெயில் வந்தது தெரியாம தூங்கிட்டு இருந்தார். சார் போஸ்ட்ன்னு ஒரு சத்தம் அசரீரி மாதிரி அவர் காதில் விழுந்துது.அவருக்கு தெரியாமலேயே அவர் உடல் துள்ளி குதிச்சு நின்னுது.எங்கிருந்து லெட்டர்ன்னு அவர் வாய் தானாவே கேட்டுது.ஆனந்த விகடன்லேர்ந்து சார்ன்னு பதில் வரவும் கார்டூன்ல ஜெர்ரிய பார்த்த டாம் மாதிரி வாசலுக்கு பாஞ்சு ஓடினார்.அவர் முகம் கூட நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கும் டாம் பூனை மாதிரி தான் இருந்தது.அதை பார்த்து மிரண்ட தபால்காரர் சீக்கிரம் லெட்டரை குடித்துட்டு எஸ் ஆனார்.

னக்கு பொறந்த முதல் குழந்தையை கையில் ஏந்தும் தகப்பனின் பரவசத்தோட அந்த லெட்டரை ஏந்தி பார்த்த அவர் முகத்தில் பத்து சுனாமி,இருபது பூகம்பத்தை ஒண்ணா பார்த்த அதிர்ச்சி......

ஏன்னா அந்த கவரை அவர் ஏற்கனவே பார்த்திருக்கார்,அந்த கையெழுத்தையும் தான்.ஆர்வக் கோளாறு கூடிப்போய் ஃப்ரம் அட்ரெஸ்ஸில் விகடன் அட்ரெஸ்சையும் டூ அட்ரெஸ்ஸில் தன் வீட்டு அட்ரெஸ்சையும் எழுதிவிட்டதும் அதனால அவர் அனுப்பின லெட்டர் அவருக்கே வந்ததும் தான் அந்த அதிர்ச்சி ரியாக்சனுக்கு காரணம்.

முகத்தில் தெரிந்த பத்து சுனாமி,இருபது பூகம்ப அதிர்ச்சியை மறைச்சுக்கிட்டு தெருவின் இரண்டு பக்கமும் பார்த்தார்.நல்லவேளை யாரும் இல்லை..

ஆனா அப்புறம் தான் அதை அவரே கவனிச்சார்.அவரின் எதிரேயே முன்பு அவர் தெரியாமல் மிதிக்க போய் ஓட ஓட விரட்டின நாய் நின்னுக்கிட்டு அவரையே முறைச்சு பார்த்தபடி இருந்துது.. இதுக்கு தானாடா எல்லா அளப்பரையுங்கிற மாதிரி.

29 comments:

 1. ஒய் திஸ் கொலை வெறி.. 2 பதிவுகளுக்கிடையே போதிய இடைவெளி வேணூம்யா

  ReplyDelete
 2. போஸ்ட் கார்டு கதையை 3 பக்க கதை ஆக்கிட்டீங்களே.. அடடே !!!!!!

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவை நடைய்யா ( எழுதும்போதே கிச்சு கிச்சு பண்ணாங்களா யாராவது? ஹே ஹே ஹேய்)

  ReplyDelete
 4. நல்லா இருக்கு பாஸ்! நகைச்சுவையாத்தான் இருக்கு.இந்த jroldmonk பெயர்க்காரணம் மட்டும் சொல்லலியே:)) pradeep kumar

  ReplyDelete
 5. நல்லா இருக்கு... நகைச்சுவையும் கவிதைத்தனமும் கலந்து அருமை...

  ReplyDelete
 6. பேசாமா காமொடி டிராக் எழுதாலம், சூப்பரு

  ReplyDelete
 7. ஒரு எழுத்தாளன் உடைய துன்பங்கள் என்ன! அவனை மனித சமுதாயம் மட்டுமில்லாமல் விலங்குகள் சமுதாயம் எப்படி பார்க்கிறது என்பதை கண்ணில் நீர் வரும் அளவுக்கு வடிக்கப் பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற முயலும் உலகில் அலட்சியம் ஒரு படைப்பாளனை எப்படி எல்லாம் தவிர்க்கிறது என்பதை படம் பிடித்து காட்டிய இந்த கதையை நான் யானைபீட விருதுக்கு பரிந்துரை செய்துவிட்டேன்! அடுத்த வாரமும் செய்வேன்!

  ReplyDelete
 8. ரெண்டு ஒல்ட்மொன்க் அடிச்சாலும் என்னால இப்படி எழுத என்னால முடியாது. அசத்தல் மச்சி

  ReplyDelete
 9. நல்ல இருக்கு பாஸ்!!! நகைச்சுவை உணர்வோடு கூடிய, அருமையான எழுத்துநடை.... கலக்குங்க! வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 10. படிச்சேன்பா...நல்ல `இலக்கியத்` தரமாக இருக்கு!

  ReplyDelete
 11. :)))))))))))))
  கண்டிப்பா ஆஷ்க்கார் விருது கிடைக்கும் ...

  ReplyDelete
 12. ஆரம்ப எழுத்தென்று சொல்லமுடியாத, எழுத்துப்பிழை மருந்துக்குக்கூட இல்லாத சீரிய நடை.
  வாழ்த்துகள்....தொடர்ந்து கலக்குங்கள் :)

  - அனு .

  ReplyDelete
 13. எங்ககேயோ போய்ட்டீங்க!!! அருமை :)

  ReplyDelete
 14. நான் ரயிலில் இருந்து படித்ததால் விழுந்து விழுந்து சிரிக்கமுடியவில்லை. ஹஹாஹா. கண்ணாடித்தரையின் கீழே ஓடும் குளிர்ந்த நீர் போல நகைச்சுவை புத்துணர்வு அளிக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி.

  ReplyDelete
 15. இனிப்பான மிட்டாய்தான் ! ஆனால் கொஞ்சம் ஜவ்வு மாதிரி இருக்கு! மொக்கைய கொஞ்சம் குறைக்கலாம்! மற்றபடி நன்று! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வாய்ப்பே இல்லைங்க. பத்து நாள் உட்கார்ந்து யோசிச்சாலும் என்னால இப்படி எழுதமுடியுமாங்கிறது சந்தேகம்தான். ரொம்ப ரசிச்சு சிரிச்சேன். சத்தியமா முதல் சிறுகதை மாதிரி தெரியல. பெரும்பாலும் நான் பின்னூட்டம் போடும்போது அந்தக் கதையோ , கட்டுரையோ அதுல இருந்து ரொம்பப் பிடிச்ச இடத்த காப்பி பண்ணி போடுவேன். ஆனா இந்தக் கதைல நான் அப்படி நினைச்சா முழுக்கதையையும் போடனும். அவ்ளோ கலக்கலா இருக்கு :))))))))))

  ReplyDelete
 17. ஜூனியர் ஓல்ட்மோன்க் - இந்த சிறு கதையை வைத்து ஒரு மெகா சீரியல் (காமெடி) தயாரிக்கலாம்...
  quarter சரக்கை...நாலு நாள் இழுத்து சாப்பிடுவீங்க - பாட்டலைச் சுத்தி சுத்தி வந்து !!!

  ReplyDelete
 18. நல்ல நகைச்சுவையுடன் கூடிய நடை.. அருமை.. :-) தொடர்ந்து எழுதுங்கள்... :-))))

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா செம சேட்டை.

  இந்தம மாதிரி கோமாளி செல்வா அண்ணாதான் (மேல கமெண்ட் போட்டு இருக்காரே) எழுதுவார். நீங்களுமா? அடுத்த செல்வாதான் போங்க.

  ReplyDelete
 20. நல்ல நகைச்சுவையுடன் கூடிய நடை.. அருமை.. :-) தொடர்ந்து எழுதுங்கள்... :-))))கடைசியில் ஒரு சஸ்பென்ஸ்.பாவமா இருந்துச்சு.

  ReplyDelete
 21. கதவை திற கற்று வரட்டும் என்னும் கதை எழுத இருக்கிறேன் வரவேற்பு கிடைகும்மா

  ReplyDelete
 22. பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கு

  ReplyDelete
 23. இத்தனை கமெண்ட்களா நெகிழ்ந்து விட்டேன்.கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த பாராட்டுகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.நிறைந்த உற்சாகத்துடன்.. மகிழ்ச்சியுடன்..

  ReplyDelete
 24. திருமாறன்.திNovember 26, 2011 at 1:48 AM

  நல்ல முயற்சி.மெல்லிய நகைச்சுவை கதை முழுக்க இழைந்தோடுகிறது.நடை மற்றும் வார்த்தைகளில் கவனம் செலுத்தினால் நல்ல கதைகள் கிடைக்கும்.வாழ்த்துகள்.தொடருங்கள்.

  ReplyDelete
 25. அண்ணே கலக்கி இருக்கீங்க போங்க... பிளேக் காமெடி, ஒயிட் காமெடி, கிரீன் காமெடி எல்லாம் பொங்கி வழியுது.. அருமை...

  ReplyDelete
 26. இன்னும் நகைச்சுவை கூட்டுங்கள்.முதல் முயற்சிக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்! தொடருங்கள்! ;-)

  ReplyDelete